தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் 9 நாட்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு! - Passenger Train Canceled From TVL

Tirunelveli to Tiruchendur Passenger Train Canceled: நெல்லை - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதினால், நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் 9 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

Nellai To Tiruchendur Passenger Train Canceled
நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் 9 நாட்கள் ரத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 3:35 PM IST

Updated : Feb 9, 2024, 10:27 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி - மேலப்பாளயம் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, ரயில்வே போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, "திருநெல்வேலியில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 06673, வருகிற 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 9 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, காலை 10.10 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06675 ரயில், 11-ஆம் தேதி மற்றும் 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஆகிய 8 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், காலை 11.05க்கு வாஞ்சி மணியாச்சியில் புறப்படும் வண்டி எண் 06679 ரயிலானது, 11-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 10 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மாலை 6.50 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06677 ரயில், 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, திருநெல்வேலியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06409 ரயிலானது, 11-ஆம் தேதியில் இருந்து 14-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு, 40 நிமிடங்கள் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. மேலும், 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, திருச்செந்தூரில் இருந்து காலை 7.20 மணிக்குத் திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் செல்லும் வண்டி எண் 06405 ரயிலானது, 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், காலை 8.15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06674, 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மதியம் 2.30 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06680 ரயில், 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மாலை 4.25 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06676 ரயிலானது, 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 7 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாலை 6.15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06678 ரயிலானது, 11-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் பயணிகள் ரயில்களான வண்டி எண் 16732 மற்றும் 16731 ஆகியன, 11-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 10 நாட்கள் திருச்செந்தூர் மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மதியம் 2.01 மணிக்கு வாஞ்சி மணியாச்சியில் இருந்து பழனி செல்லும்" என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவை டிலைட் தியேட்டர் இடிப்பு? நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை!

Last Updated : Feb 9, 2024, 10:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details