தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகை எக்ஸ்பிரஸ் உள்பட 53 ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் நிறுத்தம் - தெற்கு ரயில்வே! - vaigai express stoppings

Southern Railway: வைகை எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 53 விரைவு ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் பரிசோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது இந்த வசதி மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 1:54 PM IST

மதுரை:தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 53 விரைவு ரயில்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 6 மாதங்களுக்கு கூடுதல் ரயில் நிலையங்களில் பரிசோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. தற்போது இந்த வசதி மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, நாகர்கோவில் - மும்பை - நாகர்கோயில் ரயில் (வண்டி எண்: 16340/16339) கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திலும், மதுரை - புனலூர் - மதுரை ரயில் (வண்டி எண்: 16729/16730) கோவில்பட்டி மற்றும் சாத்தூர் ரயில் நிலையங்களிலும், திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி ரயில் ( வண்டி எண்: 16849/16850) கீரனூர் ரயில் நிலையத்திலும், தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் (வண்டி எண்: 20691/20692) சாத்தூர் ரயில் நிலையத்திலும்,

ராமேஸ்வரம் - பெரோஸ்பூர் கண்டோன்மென்ட் - ராமேஸ்வரம் ரயில் (வண்டி எண்: 20497/20498) ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ரயில் நிலையங்களிலும், ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோன்மெண்ட் - ராமேஸ்வரம் ஷிரத்தா சேது ரயில் (22613/22614) காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் நிலையங்களிலும் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும். அதே போல மதுரை - சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12636/12635) ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும், திருப்பதி - ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் (வண்டி எண்: 16779/16780) ஆரணி ரோட்டிலும்,

மங்களூரு - கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நீலேஷ்வர் ரயில் நிலையத்திலும், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் கல்லக்குடி பழங்காநத்தத்திலும், உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் துறைமுகத்திலும், தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆரணி ரோடு ரயில் நிலையத்திலும், ஹௌரா- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் திருவண்ணாமலையிலும், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்திலும், மயிலாடுதுறை - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் புகழூர் ரயில் நிலையத்திலும், மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:“இடமாற்றம் செய்யும் உத்தரவை அரசு ஊழியர்கள் தண்டனையாக பார்க்கக்கூடாது” - மதுரைக்கிளை அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details