சென்னை:நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, ராஜபாளையம், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06036) அக்டோபர் 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07:35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் எனக் கூறப்பட்டுள்ளது.