சென்னை:கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை, பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் (bagmati express) ரயில் (12578) நேற்று இரவு 8.30 மணியளவில், கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதன் எதிரொலியாக அந்த தடம் வழியாக செல்லக்கூடிய 18 ரயில்களை ரத்து செய்தும், மேலும் பல ரயில்களை தடம் மாற்றியும் ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இருந்து கிளம்பும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து கிளம்புவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத் செல்லக்கூடிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் (Navjeevan SF Express) ரயில் காலை 10:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வழக்கமாக புறப்பட்டு, விஜயவாடா வழியாக அகமதாபாத் சென்றடையும். ஆனால், கவரப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக, இரண்டு மணி நேரம் தாமதமாக 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என ரயில்வே தரப்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.