தூத்துக்குடி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- தூத்துக்குடிக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக பெங்களூரு- தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, பெங்களூரு வழியாக இயக்கப்படும் பெலகவி - தூத்துக்குடி சிறப்பு ரயில் (07361) பெலகவியிலிருந்து டிசம்பர் 20 அன்று காலை 09.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயில் பெங்களூரில் இருந்து இரவு 09.50 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - பெங்களூரு சிறப்பு ரயில் (07362) தூத்துக்குடியில் இருந்து டிசம்பர் 21 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு பெங்களூரு சென்று சேரும்.