ராமநாதபுரம்:ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக, இங்கு திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லிக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெயபெருமாள், பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரியா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதியில் வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில், திமுக கூட்டணி நவாஸ் கனி காலை 10.56 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி நவாஸ் கனி 12322 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் 11.57 மணி நிலவரப்படி, முன்னிலை வகித்த திமுக வேட்பாளர் நவாஸ் கனி, 77,317 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக கூட்டணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 41128 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ராமநாதபுரம் தொகுதி மூன்றாம் சுற்று முடிவு
வ.எண் | கட்சி பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
1. | திமுக கூட்டணி (நவாஸ் கனி) | 77,317 |
2. | பாஜக கூட்டணி (ஓ.பன்னீர்செல்வம்) | 41128 |
3. | அதிமுக (ஜெயபெருமாள்) | 17203 |
4. | நாதக (சந்திர பிரபா ஜெயபால்) | 13302 |
இதில், திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 36,189 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.