சென்னை: நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) 3வது நாளாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரக்கோணம் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த கட்ட உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எப்படி சிறப்பாக செயலாற்றுவது என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியதாகவும், ஓபிஎஸ், சசிகலா அணியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டு வரவும், பெண்களையும், இளைஞர்களையும் கட்சிப் பணிகளில் அதிகமாக ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.