மதுரை:மதுரை பரவை காய்கறி சந்தையில் காய்கறி கமிஷன் கடை நடத்தி வந்தவர் பின்னத்தேவர். சிவராமன், முத்துப்பாண்டி என்ற மகன்கள் மற்றும் மனைவியுடன், மதுரை செல்லூரில் உள்ள பூந்தமல்லி நகர்ப் பகுதியில் வசித்து வந்தநிலையில், பின்னத் தேவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார்.
தந்தையின் பிரிவைத் தாங்க முடியாத மகன் சிவராமன் மிகுந்த வருத்தத்திலிருந்தார். சிவராமனுக்கு நேற்று(திங்கட்கிழமை) திருமணம் நடைபெற்றது. தனது திருமணத்தில் தந்தையின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும் என நினைத்த சிவராமன், ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாய் செலவில் தந்தையின் உருவத்தை மெழுகு சிலையாக உருவாக்கினார்.
இதையும் படிங்க:மதுரை புத்தகத் திருவிழாவில் இப்படி ஒரு வாய்ப்பா? குவியும் பள்ளி மாணவர்கள்!