தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிய நபர் போக்சோவில் கைது..! - Teen Marriage in Chennai - TEEN MARRIAGE IN CHENNAI

15 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய கணவர் மற்றும் உடந்தையாக இருந்த மாமியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்சோ தொடர்பான  கோப்புப்படம்
போக்சோ தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 11:52 AM IST

சென்னை:சென்னையை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது சிறுமியின் தாயார் சம்மதத்துடன் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமி 3½ மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதன் காரணமாகக் கடந்த வியாழக்கிழமை சிறுமிக்குக் கடுமையான இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறுமியிடம் மருத்துவர்கள் விசாரித்த போது அவருக்கு 18 வயது பூர்த்தியாகாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்த அவரின் தாய், மாமியார் மற்றும் கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி என தெரிந்தும் திருமணம் செய்தது அம்பலமானது. இதனையடுத்து சிறுமியின் கணவர் ஆனந்த் மற்றும் அவரது தாயார் விஜயா ஆகியோரை தாம்பரத்தில் வைத்து கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமண வயதை அடையாத சிறுமிகளை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாம்பர மாநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு.. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சீல்!

ABOUT THE AUTHOR

...view details