சென்னை: இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில், சென்னை விமான நிலையம் முக்கியத்துவமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டில் சென்னை விமான நிலையத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய விமான சேவை:
கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து விமான சேவைகளும் முடக்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு 500 விமான சேவைகள் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்டது. ஆனால் கரோனோ பரவலுக்குப் பிறகு அனைத்து விமான சேவைகளும் இயக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் 4 ஆண்டு கழித்து மீண்டும் தற்போது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹாங்காங் - சென்னை- ஹாங்காங் இடையே இயக்கப்பட்டு வந்த, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு வாரத்தில் ஏழு நாட்களும் தினசரி விமான சேவைகளாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு ஏர் மொரிஷியஸ் விமான சேவைகள் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், தொழில் முனைவோர்கள் வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
அதேபோல் கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை - ஜெட்டா இடையேயான விமான சேவை 4 ஆண்டுகள் கழித்து, சென்னை ஜெட்டாயிடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. சவுதி ஏர்லைன்ஸ் விமானம் திங்கள், புதன் ஆகிய தினங்களில் சென்னை - ஜெட்டா இடையே நேரடி விமான சேவை இயக்கி வருகிறது.
கூடுதல் விமான சேவை:
சென்னையில் இருந்து குவைத்துக்கு இதுவரை ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்லைன்ஸ், ஜாகீரா ஏர்லைன்ஸ் ஆகிய 4 விமான நிறுவனங்கள் சென்னை- குவைத்- சென்னை இடையே நேரடி பயணிகள் விமான சேவைகளை இயக்கி வந்தன. இந்த நான்கு விமானங்களிலுமே பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை- குவைத்- சென்னை இடையே புதிய பயணிகள் விமான சேவையை தொடங்கியது. இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் வாரத்தில் 5 நாட்கள் செவ்வாய், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக, சென்னை- பாங்காக்-சென்னை மற்றும் சென்னை- தமாம்- சென்னை ஆகிய இரு வழித்தடங்களில் புதிய விமான சேவைகளும், உள்நாட்டு முனையத்தில் சென்னை-துர்காப்பூர்- சென்னை இடையே புதிய விமான சேவைகளும், கூடுதல் விமான சேவைகளாக தொடங்கப்பட்டன.
புதிய விமான சேவைகள் தொடக்கம்:
மலேசிய நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள பினாங்கு, மலேசியாவில் உள்ள பல்வேறு தீவுகளில் மிகப்பெரிய தீவாக உள்ளது. இங்கு பெருமளவு தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பினாங்கு தீவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. பினாங்கு தீவிற்கு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பினாங்கிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது.
இதையடுத்து பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் தொடங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பினாங்கிற்கு நேரடி தினசரி விமானத்தை இயக்க தொடங்கியது.
அதேபோல் கடந்த நவம்பர் மாதம் 6ம் தேதி முதல் புருனே நாட்டின் பந்தர் செரி பேகவான் நகர் மற்றும் சென்னை இடையே புதிய நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது. ராயல் புரூனே ஏர்லைன்ஸ் இன் ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் ஒரு வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் மக்கள் வருகை அதிகரிக்கும் போது வாரம் முழுவதும் செயல்படுத்தபடும் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் தாய்லாந்து நாட்டின் கடற்கரை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமான புகட் நகருக்கு, வாரத்தில் மூன்று நாட்கள் தாய் ஏர் ஏசியா விமானம் நேரடி விமான சேவையை புதிதாக இயக்கி வருகிறது. புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு மூன்று தினங்கள் இந்த விமான சேவைகள் சென்னையிலிருந்து புகட் நகருக்கு இயக்கப்படுகிறது.
பார்க்கிங் கட்டணம் திடீர் உயர்வு:
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மல்டி லெவல் அடுக்குமாடி கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்தது. அப்போது ஏற்கனவே இருந்த பார்க்கிங் கட்டணத்தை அதிகமாக உயர்த்தி நிர்ணயம் செய்தனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் 2 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தாண்டு மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 80 ஆக இருந்தது, தற்போது ரூ. 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கார்களுக்கு அதிக பட்சம் 24 மணி நேரத்திற்கு ரூ. 525 ஆக இருந்தது, தற்போது ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெம்போ வேன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.315 ஆக இருந்தது, தற்போது ரூ.330 ஆக அதிகரிப்பு. 24 மணி நேரத்திற்கு கட்டணம் ரூ.1,050 ஆக இருந்தது, தற்போது ரூ.1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பஸ், லாரிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.630 ஆக இருந்தது, தற்போது ரூ.660 ஆக அதிகரிப்பு. 24 மணி நேரத்திற்கான கட்டணம் ரூ.2,100 ஆக இருந்தது, தற்போது ரூ.2,205 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களும், கட்டண உயர்வுக்கு தப்பவில்லை. 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை கட்டண உயர்வு இல்லாமல், பழைய கட்டணமான ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை இருந்த பழைய கட்டணம் ரூ.30, இப்போது ரூ.35 ஆகவும், 24 மணி நேரத்திற்கான பழைய கட்டணம் ரூ.95, இப்போது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சுங்க பிரிவில் கூடுதல் மோப்ப நாய்கள்:
சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள், ஆயுதங்கள், அபூர்வ வகை மற்றும் ஆபத்தான வன உயிரினங்கள், வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக் கடத்தல்களை கண்டுபிடிப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் கே 9 எனப்படும் மோப்ப நாய்கள் ஸ்குவாட் உள்ளது. அதில் தற்போது ஆர்லி, ஆரியோ, ஸ்னோ பாய், ராக் என்ற 4 மோப்ப நாய்கள் உள்ளன. இவைகள் வெடி மருந்துகள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் போன்றவைகளை திறமையாக கண்டுபிடிக்கின்றன.
ஆனால், வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் அபூர்வ வகை மற்றும் ஆபத்தான வன உயிரினங்களை கண்டுபிடிப்பதற்கு, திறமையான மோப்ப நாய்கள் இல்லை. இந்த குறையை போக்குவதற்கு, சென்னை விமான நிலையத்தின் கே 9 மோப்ப நாய் ஸ்குவாட் பிரிவுக்கு மேலும் 3 மோப்ப நாய்கள் வரவிருக்கின்றன. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் கே9 ஸ்குவாடு பிரிவிற்கு, மோப்ப நாய்களின் எண்ணிக்கை, 4 இல் இருந்து 7 ஆக அதிகரிக்க இருக்கிறது.
2024 ஆம் ஆண்டு அதிக அளவில் பயணிகள் விமானப் பயணம்