சென்னை: இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்து வரும் புதிய திரைப்படம் 'வீர தீர சூரன்'. ரியா ஷிபு இந்த படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில், வீர தீர சூரன் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் படத்தின் போஸ்டர்கள் வெளியானது.
இதில் நடிகர் விக்ரம் இரண்டு கையிலும் அரிவாளுடன் இருப்பது போன்ற போஸ்டர்கள் வெளியாகின. இந்நிலையில், விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தைக் கொண்டு செல்வதாகவும், இதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ.செல்வம் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளார்.