தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேட்டில் திருநங்கையை வெட்டி வழிப்பறி.. தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது! - koyambedu robbery

koyambedu robbery gang arrested: கோயம்பேட்டில் திருநங்கை உட்பட நான்கு பேரை கத்தியால் வெட்டி பணம் பறித்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான வழிப்பறி கும்பல்
கைதான வழிப்பறி கும்பல் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 11:59 AM IST

சென்னை: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அஜித் (27). திருநங்கையான இவர் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பகுதியில் நடந்து சென்ற போது, அங்கு வந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காததால் அந்த கும்பல் அவரது கையில் கத்தியால் வெட்டி விட்டு பணத்தை பறித்து சென்றனர்.

இதேபோல் அந்த வழியாக சென்ற ஆட்டோவை மடக்கி கண்ணாடியை உடைத்த மர்ம கும்பல், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த காவலாளி ஒருவரையும் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளது.

இதுபோல, தொடர்ந்து நான்கு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டியும், கத்தியால் வெட்டியும் பணம் மற்றும் செல்போனை அந்தக் கும்பல் பறித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து கோயம்பேடு போலீசாருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மதுரவாயல் அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்த விக்கி (என்ற) மாடா விக்கி (25), ஆகாஷ் (என்ற) கருவாடு ஆகாஷ் (25), மணிகண்டன் (21), சூர்யா (என்ற) தளபதி சூர்யா (21), தமிழரசன் (21), கிசோர் (21) உள்ளிட்ட ஆறு பேர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய ஆகாஷ்க்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு பேரில் விக்கி என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது தவிர பல்வேறு இடங்களில் மாமூல் கேட்டு தகராறு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆறு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவர்கள் இதுபோன்று வேறு ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:யூடியூபர் பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details