தேனி:விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேனியில் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் சார்பில், சுமார் 800க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்ய மாவட்ட போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
சிவசேனா கட்சியினர் விநாயகர் ஊர்வலம் (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், இன்று தேனியில் சிவசேனா கட்சியினர் சார்பில் 4 அடி விநாயகர் திருமேனிக்கு வழிபாடு செய்யப்பட்டது. இதனையடுத்து விநாயகர் சிலையை நேரு சிலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தேனி அரண்மனை புதூரில் உள்ள பெரியாற்றில் கரைக்கப்பட்டது.
முன்னதாக, சிவசேனா கட்சியினர் விநாயகர் சிலையை கரைப்பதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் போலீசசார் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில், போலீஸின் அனுமதியை மீறி சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குரு ஐயப்பன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட கட்சியினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:பாதுஷா விநாயகர்! காமாட்சி விளக்கு விநாயகர்! பல்வேறு தோற்றத்தில் சென்னையை கலக்கும் யானைமுகன்!