தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எனது மகன்கள் தலைமறைவாக இல்லை; அவதூறுகளை பரப்ப வேண்டாம்" - பாடகர் மனோவின் மனைவி வேண்டுகோள்! - mano son issue

மதுபோதையில் சிறுவர் உட்பட இரண்டு பேரை தாக்கிய விவகாரத்தில், எனது மகன்கள் தலைமறைவாக இல்லை. எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என்றும், தேவையற்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம் எனவும் பின்னணி பாடகர் மனோவின் மனைவி ஜமிலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னணி பாடகர் மனோ குடும்பத்தார்
பின்னணி பாடகர் மனோ குடும்பத்தார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 11:11 PM IST

சென்னை:மதுபோதையில் சிறுவர் உட்பட இரண்டு பேரை தாக்கியதாக பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் சாஹீர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மனோ மனைவி ஜமிலா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த விவகாரத்தில் மனோ மகன்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மனோவின் இரண்டு மகன்கள் உட்பட 3 நபர்கள் தலைமறைவாக இருப்பதால் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பின்னணி பாடகர் மனோவின் மனைவி ஜமிலா, "என்னையும், எனது மகன்களையும் 10க்கும் மேற்பட்டவர்கள் தாக்கினார்கள். இதில் எனக்கும், எனது மகன்கள் மற்றும் அவரது நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

இதையும் படிங்க:மதுபோதையில் சிறுவர்களை தாக்கிய விவகாரம்; தலைமறைவான பிரபல பின்னணி பாடகரின் மகன்களை தேடும் சென்னை போலீஸ்! - mano sons abscond

தகராறில் ஈடுபட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அவர்களுக்கு அது பிரச்னையில் முடியும் என தாய் உள்ளத்துடன் புகார் அளிக்க வேண்டாம் என இருந்தேன். எனது மகன்கள் தலைமறைவாக இல்லை. தொடர்ந்து மகன்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதால் அவமானத்தில் அவர்கள் வெளியே சென்று இருக்கலாம். தற்போது வரை மகன்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை.

எதிர் தரப்பினர் தாக்கியதில் எனக்கும், எனது மகன்கள் அவரது நண்பர்கள் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. மகனின் நண்பருக்கு விலா எலும்பு உடைந்துள்ளது. எனக்கு கை, முகத்தில் காயம். மகன்களுக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் உள்ளோம். தேவையற்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details