தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவதூறு வழக்கில் அப்பாவுக்காக ஆஜரான சிங்கமுத்து மகன்.. வடிவேலு தொடர்ந்த வழக்கில் சுவாரஸ்யம்! - karthik raja appear singamuthu case

நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகர் சிங்கமுத்துவுக்கு ஆதரவாக அவரது மகன் கார்த்திக் ராஜாவே வழக்கறிஞராக ஆஜராகி வாதம் செய்தார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சிங்கமுத்து, கார்த்திக் ராஜா அடையாள அட்டை
சிங்கமுத்து, கார்த்திக் ராஜா அடையாள அட்டை (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் வடிவேலு, சிங்கமுத்து மீது பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

அனைத்து வழக்குகளும் முடிந்து விட்ட நிலையில், அவதூறு வழக்கில் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு மட்டும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் சிங்கமுத்து தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க :தீபாவளி பண்டிகை சிரமத்தை தவிர்க்க பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்குக - தமிழக அரசுக்கு கோரிக்கை

இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து சார்பாக அவரது மகன் கார்த்திக் ராஜா வழக்கறிஞராக நீதிமன்றத்தில் ஆஜரானார். எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ சைக்காலஜி பட்டதாரியான இவர், இந்தியாவின் தலைசிறந்த சட்டக் கல்லூரிகளில் ஒன்றான நல்சாரில் (NALSAR) க்ரைம் சட்டப் (Crime Law) படிப்பில் கடந்த 2023ம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

மேலும், ஒரு வழக்கறிஞராக மட்டுமல்லாமது நடிகராகவும் அய்யன், மாமதுரை மற்றும் கொடை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details