தூத்துக்குடி:தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக்கலை சிலம்பம் மற்றும் பொங்கல் பண்டிகையை உலகத்திற்கு எடுத்துக்காட்டும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் தேரிக்காடு பகுதியில் 'சிலம்பம் பொங்கல்' கொண்டாடப்பட்டது. தமிழர்களின் வீரத்தையும், கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பையும், உற்சாகத்தையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பண்டிகையாக இருந்து வருகிறது.
மேலும், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தைப்பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், புது முயற்சியாக, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தனியார் கராத்தே மற்றும் சிலம்பம் பள்ளி சார்பாக பாரம்பரிய முறைப்படி தேரிக்காட்டில் சிலம்பம் பொங்கல் கொண்டாடப்பட்டது.