திருவாரூர்: சந்திரசேகரன் (வயது 54) என்பவர் தனது குடும்பத்தினருடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து வேளாங்கண்ணிக்கு மகேந்திரா ஸ்கார்பியோ காரில் நேற்று (ஏப்.5) இரவு புறப்பட்டு சென்றுள்ளார். காரை சந்திரசேகரனின் மகன் சரண் 24 என்பவர் ஓட்டிய நிலையில், மனைவி ஜான்சி ராணி (45), உறவினர் மாரிமுத்து (54), பேபி (48), கார்த்திகா (31), இரட்டை குழந்தைகளான யுவன் 3 மற்றும் யுவிதன் 3 ஆகியோரும் இந்த காரில் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை ஓரத்தில் அதிகாலை கார் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் சரணின், கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு ஓடியதில் அருகில் இருந்த பனை மரத்தில் மோதி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்திரசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.