சென்னை:திருப்பூர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட தமிழக முழுவதும் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று (ஜன.27) உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக முதன்மை செயலாளர் அமுதா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
- அதேநேரம், திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கோவை துணை ஆணையர் எம்.ராஜன் நியமிக்கப்படுகிறார்.
- திருநெல்வேலி நகர காவல் துணை ஆணையராக, மதுரை துணை ஆணையராக இருந்த ஜி.எஸ். அனிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருப்பூர் துணை ஆணையராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை மாவட்ட பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி காவல் கண்காணிப்பாளராக எஸ்.சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை கொளத்தூர் காவல்துறை துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஆர்.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை மத்திய புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பி. சியாமளா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கோவை வடக்கு மாவட்ட காவல்துறை ஆணையராக சட்டம் மற்றும் ஒழுங்கு ரோஹித் நாதன் ராஜகோபால் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
- வடசென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரவணகுமார் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.