தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடி ஆடி விளையாடும் வயதில் அறிவியல் பெயர்களில் சாதனை படைத்த பழனி சிறுவன்! - Palani boy record

Dindigul child record: பழனி அருகே நெய்க்காரபட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் முகமது ஹிசாம், காய்கள், பழங்களின் அறிவியல் பெயர்களை சில நொடிகளில் கூறி அசத்தி இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.

உலக சாதனை புரிந்த சிறுவன் புகைப்படம்
உலக சாதனை புரிந்த சிறுவன் புகைப்படம் (Credit to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 11:46 AM IST

Updated : May 10, 2024, 7:37 PM IST

உலக சாதனை புரிந்த சிறுவன் வீடியோ (Video Credit-ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்:ஓடி விளையாடும் வயதில் 7 வயது சிறுவன் முகமது ஹிசாம், காய்கள், பழங்களின் அறிவியல் பெயர்களை நொடிகளில் கூறி சாதனை படைத்துள்ளார். பழனி அருகே நெய்க்காரபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஹிசாம். இவர் நெய்க்காரபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை அஷ்ரப் அலி, வேளாண்துறையில் பணியாற்றி வருகிறார். தாய் சையது ஒலி பாத்திமா இல்லத்தரசியாக உள்ளார்.

புரிந்த சாதனைகள்:தற்பொழுது இவர் காய்கள், பழங்கள், விலங்குகள், மலர்களின் அறிவியல் பெயர்களை வரிசைப்படுத்தி நொடிகளில் கூறி அசத்தியுள்ளார். அதாவது, 50 அறிவியல் பெயர்களை 71 வினாடிகளில் வேகமாகக் கூறி இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.

மேலும், இவர் அகர வரிசையில் அறிவியல் பெயர்களை 74 வினாடிகளில் கூறிய மற்றொருவர் செய்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். மேலும், 55 அறிவியல் பெயர்களை ஒரு நிமிடம் 51 வினாடிகளில் கூறி, ஏற்கனவே கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட் உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சாதனை புரியும் ஆர்வம்:வேளாண் துறையில் பணியாற்றும் தனது தந்தை தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும்போது அருகில் அமர்ந்து அவர் படிப்பதைக் கேட்கும் சிறுவன் முகமது ஹிசாம்க்கு, அறிவியல் பெயர்களை மனப்பாடம் செய்து விளையாடும் போதெல்லாம் சரியாகக் கூறியதைப் பார்த்து, தொடர்ந்து அதில் திறமையை வளர்க்க நினைத்த பெற்றோர், அறிவியல் பெயர்களைச் சொல்லிக் கொடுத்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியதாகச் சிறுவனின் தாய் சையது ஒலி பாத்திமா தெரிவித்துள்ளார். சிறுவனின் பெற்றோர், முகமது ஹிசாம் தொடர்ந்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுவதற்காகப் பல முயற்சியில் சிறுவன் ஈடுபடுத்த விரும்புவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க:ஜாபர் சாதிக் முதல் சவுக்கு சங்கர் வரை.. இயக்குநர் அமீர் பிரத்யேக பதில்கள்! - Ameer About Savukku Shankar

Last Updated : May 10, 2024, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details