தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சின்னத்திரை நடிகரின் மகன் கார் விபத்தில் உயிரிழப்பு! - DIWALI ACCIDENTS

சென்னையில் சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்குள்ளான கார் மற்றும் உயிரிழந்த லித்தீஷ்
விபத்துக்குள்ளான கார் மற்றும் உயிரிழந்த லித்தீஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 3:38 PM IST

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் ஸ்ரீ காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக். இவரது மகன் லித்தீஷ் (21). இவர், இன்று அதிகாலை 2 மணியளவில், தனது நண்பர்கள் ஜெயகிருஷ்ணண் மற்றும் வெங்கட் ஆகியோருடன் பழைய மகாபலிபுரம் சாலையில் தீபாவளி கொண்டாட்டம் முடித்து விட்டு, காரில் வேளச்சேரி - தரமணி சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, வேளச்சேரி - தரமணி 100 அடி சாலை விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.‌ இதில் காரை ஓட்டிச் சென்ற இளைஞர் லித்தீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் பயணம் செய்த ஜெய் கிருஷ்ணன் மற்றும் வெங்கட் இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதனிடையே, இதனைப் பார்த்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், இது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அங்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், சாலை விபத்தில் உயிரிழந்த லித்தீஷ் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌

மேலும், காயமடைந்த இருவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.‌ பின்னர் இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌ மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த நித்தீஷ் ஆதித்யாவின் தந்தை கார்த்திக் சின்னத்திரை நடிகர் என கூறப்படுகிறது..Conclusion:

ABOUT THE AUTHOR

...view details