சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்.
வருவாய் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் விவரம்:
வ.எண் | மாவட்டம் | பொறுப்பு அமைச்சர்கள் |
1 | கோயம்புத்தூர் | மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி |
2 | திருநெல்வேலி | நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு |
3 | தேனி | ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி |
4 | திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி | பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு |
5 | தருமபுரி | வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் |
6 | தென்காசி | வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் |
7 | கன்னியாகுமரி | நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு |
8 | நீலகிரி | தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் |
9 | கிருஷ்ணகிரி | உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி |
10 | காஞ்சிபுரம் | கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி |
11 | பெரம்பலூர் | போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் |
12 | நாகப்பட்டினம் | பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி |
13 | மயிலாடுதுறை | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் |