தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செம்பியம் பெண் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் மரணம்.. திடீரென எடுத்த வாந்தி.. போலீஸ் தீவிர விசாரணை..! - woman ssi dies of heart attack - WOMAN SSI DIES OF HEART ATTACK

sembiam woman police dies of heart attack: செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பேசி கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா, மாரடைப்பு குறித்த கோப்புப்படம்
சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா, மாரடைப்பு குறித்த கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 1:39 PM IST

சென்னை: சென்னை பெரவள்ளூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசித்ரா (49). இவர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ஜெயசித்ரா திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில். நேற்று இவர் தபால் பணியாக தடய அறிவியல் துறை பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

பிறகு அயனாவரத்தில் வசிக்கும் தனது சகோதரி பாண்டிசெல்வி வீட்டிற்கு சென்று அவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது ஜெயசித்ரா திடீரென வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனால் பதறிப்போன அவரது சகோதரி உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கிருந்த மருத்துவர், ஜெயசித்ராவுக்கு சுகர் அளவு அதிகமாக உள்ளது மேலும் நாடித்துடிப்பு விகிதம் குறைவாக இருப்பதால் உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து கெல்லிசில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது ஜெயசித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அயனாவரம் போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அயனாவரம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன ஜெயசித்ராவிற்கு சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வம்பரம்பட்டி கிராமம். அதனால், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்..! இதை செய்தால் தப்பிக்கலாம்..

ABOUT THE AUTHOR

...view details