தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியாக போட்டியிட தயார்.. செல்வப்பெருந்தகை பதிலின் பின்னணி என்ன? - selvaperunthagai

Tamil Nadu Congress Leader Selvaperunthagai: காங்கிரஸ் யாருக்காகவும் சீட்டுக்காக ஏங்கியதில்லை என்றும், தனியாக போட்டியிட வேண்டுமா என்பதை தலைமைதான் முடிவு செய்யும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 5:20 PM IST

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியால் எவ்வித பயனும் இல்லை என பல்வேறு கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும், பாஜக அட்சி அதிகளவில் கடன் வாங்கி, இந்திய மக்களின் மீது கடன் சுமையை ஏற்றியுள்ளது. பிரதமர் சொன்ன திட்டங்களை இதுவரை எதையும் நிறைவேற்ற முடியவில்லை. வெளியுறவுக் கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்திருக்கிறது.

திடீரென எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி பிரதமர் மோடி புகழ்ந்து பேசியிருக்கிறார். அதிமுகவிற்கு வலை விரிக்கிறார் என தோன்றுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக ஒரு ஊழல் கட்சி என்றும், ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்றவர் என்றும் பேசியிருந்தார்.

நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு, அதுவே பாஜக. ஆகவே உண்மைக்குப் புறம்பாக எந்த அளவிற்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்க முடியுமோ, எந்த அளவிற்கு மக்களை ஏமாற்ற முடியுமோ, அந்த வேலையை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இன்னும் இரண்டு வாரங்களில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வருகிறார். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்கவில்லை. தி.மு.க, காங்கிரஸ் உறவு என்பது நல்ல முறையில் உள்ளது.

எங்கள் கட்சி கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் உள்வாங்கிய கட்சி. ஏற்றத்தாழ்வு இல்லாத கட்சி. தோழமையோடு இருக்கிறோம். இல்லை என்றால் தனியாக போட்டியிடுவோம். கடந்த 2014-இல் கூட தனியாகத்தான் போட்டியிட்டோம். காங்கிரஸ் யாருக்காகவும் சீட்டுக்காக ஏங்கியதில்லை. தனியாகப் போட்டியிட வேண்டுமா என்பதை தலைமைதான் முடிவு செய்யும்.

திமுகவும், காங்கிரஸும் நல்ல தோழமையுடன் இருக்கிறது. திமுக தலைவரும், ராகுல் காந்தியும் அண்ணன், தம்பி போல் பழகி வருகின்றனர். அதனால் கூட்டணி பேச்சுவார்த்தை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருகிறது. நல்ல முடிவு எட்டப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அழைப்பு விடுக்கும் திமுக.. பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுக்கும் விசிக.. அதிருப்திக்கு காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details