தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை ஜெயக்குமார் மரணம்: 'யாராக இருப்பினும்.. பாரபட்சமில்லாமல் நடவடிக்கை' - செல்வப்பெருந்தகை - NELLAI CONGRESS PRESIDENT JAYAKUMAR

Selvaperunthagai on Tirunelveli Congress leader Jayakumar death issue: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் பாதி எரிந்த நிலையில் சடலமாக கரைசுத்துப் புதூரில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிள் யாராக இருந்தாலும், காவல்துறை பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tirunelveli Congress leader Jayakumar death issue
நெல்லை ஜெயக்குமார் மரணம் (Photos Credits to Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 11:17 AM IST

திருநெல்வேலி: மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமாக யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எந்தக் கட்சி பின்பலம் இருந்தாலும் அவர்கள் மீது தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்என காவல்துறைக்கு கேட்டுக் கொள்வதாக நெல்லையில் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை என அவரது உறவினர்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

ஜெயக்குமார் உடல் ஒப்படைப்பு: இதனிடையே, நேற்று அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் அவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த அவரது உடலை உவரி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்களிட்ம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியளர்களிடம் பேசிய அவர், 'ஒரு நல்ல மனிதர் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தற்போது உயிரிழந்து உள்ளார் என்பது தொடர்பாக எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

யாராக இருந்தாலும் நடவடிக்கை: இந்த சம்பவத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் எந்த கட்சியின் பின்புலத்தில் இருந்தாலும், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்று மாலைக்குள் ஒரு ஒரு நல்ல தகவல் வெளியே வரும் என்று மாவட்ட எஸ்பி என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும், அவரது மரண வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அது யாருடைய பெயர்கள் இருந்தாலும் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், 'எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கூட இருந்தாலும் கூட காவல்துறை வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டால்தான் இவர் உயிர் இழப்புக்கு யார் காரணம்? என்பது வெளியே வரும். மேலும், நாங்கள் கட்சி ரீதியாகவும் இதை விசாரித்து நாங்கள் மேலிடத்திற்கு இந்த அறிக்கையை அனுப்பவும்.

பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை: காவல்துறை விசாரணை என்பது தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக, மற்ற தகவல்கள் எங்களால் வெளியே தெரிவிக்க முடியாது. இதில், பணம் படைத்தவராக இருக்கலாம்; மிகப்பெரிய அரசியல்வாதியாக கூட இருக்கலாம். அப்படி இருந்தாலும் கூட, அவர்கள் மீதும் காவல்துறை பாரபட்சம் காட்டாமல் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் உள்ளதாக எனது கட்சிக்காரர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அதேபோன்ற புகைப்படங்களும் வெளியாகின. ஆகவே இதில், பெரும் சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக, காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

ரூபி மனோகரன் எம்எல்ஏ மீது விசாரணை?: நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது விசாரணை நடத்தப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் மீதும் விசாரணை நடத்தலாம். நாங்க தான் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். இந்த விசாரணை என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான். மேலும், உயிரிழந்த ஜெயக்குமாரின் கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டுள்ளது.

இதிலிருந்து ஏதோ ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதாக எங்களுக்கு தெரிகிறது. ஆகவே தான், நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். வெளிப்படையான விசாரணை மேற்கொண்டால்தான் இவருடைய உயிர் இழப்புக்கு காரணம் என்பது வெளியே வரும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. - NELLAI CONGRESS PRESIDENT JAYAKUMAR

ABOUT THE AUTHOR

...view details