தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை கேளிக்கை விடுதி விபத்து விவகாரம்; கேளிக்கை விடுதி மேலாளர் கைது - CHENNAI PUB CEILING FELL - CHENNAI PUB CEILING FELL

Chennai Pub ceiling fell issue: சென்னை ஆழ்வார்பேட்டையில் ஷெக்மேட் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட கேளிக்கை விடுதியின் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai Pub ceiling fell issue
Chennai Pub ceiling fell issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 1:56 PM IST

சென்னை:ஆழ்வார்பேட்டை சேவியர் சாலையில் ஷெக்மேட் கேளிக்கை விடுதி (Sekhmet Pub ceiling fell issue) என்ற மதுபான கூடம் ஒன்று இயங்கி வந்தது. இந்த மதுபானக் கூட்டத்தின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்றிரவு எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததில் அதில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து உடனடியாக காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று நள்ளிரவு வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி இருந்த மூன்று பேர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், (304A) கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:“கேளிக்கை விடுதி விபத்து மெட்ரோ பணிகளால் அல்ல” - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு! - Chennai Pub Ceiling Fell

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுபான விடுதியின் மேலாளர் சதிஷ் உட்பட 12 பேரிடம் அபிராமபுரம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து எதனால் நடைபெற்றது? என அறிக்கை வந்தவுடன் அதன் அடிப்படையில் யாரெல்லாம் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளார்கள் எனக் கண்டறிந்து அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுபான விடுதியின் மேலாளர் சதீஷ் என்பவரை அபிராமபுரம் போலீசார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், மதுபான கூடத்தின் உரிமையாளர் அசோக் குமார் என்பவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். அவரை கைது செய்வதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் அதிமுக வாக்குகளை குறிவைக்கும் நயினார் நாகேந்திரன்.. கையாளும் யுக்தி என்ன? - Nainar Nagendran Election Campaign

ABOUT THE AUTHOR

...view details