தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவிக்கு பாராட்டு விழா! - TN SSLC RESULT - TN SSLC RESULT

சத்தியமங்கலம் அரசூர் கிராமத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் எடுத்து சாதித்த மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது

மாணவி கோபிகாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழா
மாணவி கோபிகாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழா (Photo credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 3:03 PM IST

மாணவிக்கு நடைபெற்ற பாராட்டு விழா (Video credits - ETV Bharat Tamil Nadu)

சத்தியமங்கலம் : அண்மையில் வெளியான 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் எடுத்து சாதித்த மாணவி கோபிகாவுக்கு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

சத்தியமங்கலம் அரசூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் கோபிகாவுக்கு சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கிணறு கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்வியாளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தங்கராஜ், விடுதலை களம் நிறுவனர் நாகராஜ் ஆகியோர் மாணவியை வாழ்த்தி பேசினர். இதைத்தொடர்ந்து மாணவி கோபிகாவுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

கிராமப்புற பள்ளியில் படித்து தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற கோபிகாவின் சாதனையானது மற்ற கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் என ஊர் பிரமுகர்கள் பாராட்டி பேசினர். இதில் ஊர் பொதுமக்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் கிராமப்புறப் பள்ளிகள் அதிகளவில் உள்ளன. இப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டிருக்கின்றனர். எனவே, மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில், தங்களின் பெற்றோருக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுவதால், பொதுத் தேர்வுகளில் பெரும்பாலும் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதில்லை. இந்த நடைமுறைக்கு மாறாக, கோபிகா 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்திருப்பது கிராமப்பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்கும் அவர்களிடத்தில் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் சர்வதேச கலாச்சார மாநாடு; தமிழரின் பாரம்பரிய நிகழ்ச்சிகளை சேர்க்க நடவடிக்கை - ஐஐடி இயக்குனர் தகவல்! - IIT Madras

ABOUT THE AUTHOR

...view details