தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு; திருவண்ணாமலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்! - Minister Anbil Mahesh

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், நேற்று திருவண்ணாமலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2024, 7:24 AM IST

Updated : Oct 7, 2024, 7:29 AM IST

திருவண்ணாமலை: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவ்வப்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 234/77 ஆய்வுப் பயணத்தின் கீழ் 207ஆவது ஆய்வை திருவண்ணாமலையில் நேற்று மேற்கொண்டார்.

பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம் அமைச்சர் எ.வ.வேலு தொகுதியில் அமைந்துள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாடினார். மாதிரிப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 525 பேர் உலகின் தலைசிறந்த உயர்கல்வி நிலையங்களில் இணைந்துள்ளதை குறிப்பிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதையும் படிங்க:கோவையில் 'விஸ்வகர்மா' சர்ச்சை பேச்சு விவகாரம்: வானதி சீனிவாசன் விளக்கம் - vanathi srinivasan on Vishwakarma

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், பள்ளியின் அடிப்படை கட்டுமானங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளியின் கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்குமாறும், கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்துமாறும் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாணவர்களுக்கான குடிநீரின் தரத்தையும் பரிசோதிக்குமாறு உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வுகள் கடந்த செப்டம்பர் 23ஆம் தொடங்கிய நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களைச் சந்திக்கும் நோக்கில் நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடைபெறும் அறைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 7, 2024, 7:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details