சென்னை: சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு காவல் துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், செப்.7ஆம் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மூன்று நாட்களாக விரிவாக விசாரணை நடத்தி வருகிறார். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மட்டும் இல்லாமல்,
தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடமும் இது தொடர்பான விசாரணையை பள்ளி கல்வி இயக்குநர் நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க:மகாவிஷ்ணு சொற்பொழிவு விவகாரம்: "கல்வி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும்"