தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு..ஆவணமில்லாத 10 கிலோ நகைகள் சிக்கியது என சென்னையில் நடந்த குற்ற சம்பவங்கள் - Chennai Crime News - CHENNAI CRIME NEWS

Chennai Crime News: தவறான சிகிச்சையால் பள்ளி சிறுவனின் உயிர் பறிபோன சோகமான சம்பவம் முதல், உரிய ஆவணமில்லாத மலபார் நகைக்கடைக்கு சொந்தமான 10 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது வரை சென்னையில் நடந்த குற்றங்களை விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு.

Chennai Crime News
Chennai Crime News

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 7:41 AM IST

Updated : Apr 10, 2024, 11:45 AM IST

சென்னை: தாம்பரம் அருகே சக்கரை நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர், ஒரு சிறுவனுக்கு அறுவை சிக்கிச்சை செய்த போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பார் பாத்திரத்தில் விழுந்த சிறுவன்:சென்னை புதுபெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(40). இவர், அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இவரது இரண்டாவது மகன் மதன் கடந்த ஜனவரி மாதம் உணவகத்திற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக மதனை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தவறான சிகிச்சையளித்த மருத்துவர்: அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்ட போதிலும், மதனின் வலது கை பலத்த தீக்காயம் இருந்ததால் பம்மலில் உள்ள சினேகா ஜெனரல் சர்ஜிக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மாறன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதால் அதற்கு பெற்றோரும் ஒப்புகொண்டுள்ளனர்.

சிறுவனின் உயிர் போன சோகம்; பணம் கொடுத்து சமாளிக்க முயற்சி:இந்நிலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக கொண்டு சென்ற ஒருமணி நேரத்தில் தொடை பகுதியில் இருந்து சதை எடுக்க முயன்றபோது அதிக ரத்த போக்கு காரணமாக, சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு வந்த வார்டு உறுப்பினர் வே.கருணாநிதியின் ஆதரவாளர்கள் பெற்றோரிடம் பணம் தருவதாக கூறி சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவிக்காத பெற்றோர் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தப்பியோடிய மருத்துவருக்கு வலைவீச்சு:இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் அசம்பாவிதம் எதும் ஏற்படாமல் இருப்பதற்காக, பிரேத பரிசோதனைகாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், சக்கரை நோயளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மாறன், பொய்யான அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மருத்துவர் மாறனை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர். இதனால், அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, இலவச பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பணியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி பறிமுதல் செய்யப்படுபவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகின்றன. உரிய ஆவணங்கள் இல்லாத பணம், நகை ஆகியவற்றை அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய மாநகராட்சி கருவூலத்தில் ஒப்படைத்து சீல் வைத்து வருகின்றனர்.

ஆவணமில்லாத 10 கிலோ தங்கம் பறிமுதல்:இந்த நிலையில் நேற்றிரவு அசோக் நகர் சக்கரபாணி தெரு வழியாக தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த மலபார் தங்க நகை கடைக்கு சொந்தமான வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், 10 கிலோ தங்கம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்டது.

கருவூலத்தில் ஒப்படைப்பு:விசாரணை மேற்கொண்ட பொழுது 10 கிலோ தங்க நகைகளை ஈக்காட்டுத்தாங்கல் உள்ள அலுவலகத்தில் ஒப்படைப்பதாக ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதனை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா பொட்டலங்கள் போன்று கொண்டு வந்த 40 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.40 லட்சம் பறிமுதல்:ஆந்திர மாநிலம், குண்டூரில் இருந்து வந்த ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. அப்போது, வழக்கமான சோதனையில் ஈடுபட்ட ரயில்வே போலீசார், சந்தேகத்திற்கு இடமான ஞானவேல் என்பவரின் உடமைகளை சோதனையிட்டனர்.

வருமான வரித்துறை விசாரணை:அதில், கஞ்சா பொட்டலத்தைப் போல் இருந்த பாக்கெட்டுகள் குறித்து கேட்டதில், திணறிப்போன ஞானவேல், அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பத்கை ஒப்பு கொண்டார். இதையடுத்து, பறக்கும் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், ரயில்வே காவல் நிலையம் அழைத்து வரப்பட்டரின் உடமையில் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணம் இல்லாமல், சென்னைக்கு தங்க நகை வாங்க வந்ததாக கூறப்படும் நிலையில், தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:சிதம்பரத்தில் திருமாவளவனின் தற்காலிக வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை! - VCK Thirumavalavan House IT Raid

Last Updated : Apr 10, 2024, 11:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details