சென்னை: யூடியூப்பரான சவுக்கு சங்கர், சமீபத்தில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்ததாக கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தேனியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் ஏப்ரல் 17ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கோவை சிறையில் சவுக்கு சங்கர் சித்ரவதைக்கு உள்ளாவதாகவும், மனித உரிமை மீறப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.