பெரம்பலூர்: பெண் போலீசார் குறித்து அவதூறாக யூடியூப் சேனலில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செந்தமிழ்செல்வி என்பவர் கடந்த மே 6ஆம் தேதி அன்று புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் U/s 67 IT Act & 294(b), 353, 509 IPC r/w 4 of TNPWH Act 2002 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் ஆஜர் செய்வதற்காக சென்னையில் இருந்த சவுக்கு சங்கரை அழைத்து வந்த பெரம்பலூர் மாவட்ட போலீசார், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பர்வத்ராஜ் ஆறுமுகம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.