திருப்பத்தூர்: திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடம் உள்ளது. அதனை தனி நபர் ஒருவர் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் அருகில் இருக்கும் மூடப்படாத கால்வாயில் கலக்கப்படுகிறது.
இந்நிலையில், கால்வாய் நிரம்பி தேங்கி நிற்பதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் கழிப்பிடத்தை ஏலம் எடுத்த ஒப்பந்தகாரரிடம் சுட்டிக் காட்டி உள்ளனர். உடனடியாக அவர் எந்த வித இயந்திரமும் இன்றி 2 நபர்களை வைத்து மலக்கழிவுகளை வெட்ட வெளியில் அள்ளி போட சொன்ன சம்பவம் அப்பகுதியில் அரங்கேறி உள்ளது. வெட்ட வெளியில் மலக் கழிவுகளை அள்ளி போட்டதால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஒவ்வாய்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.