தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களை கட்டும் கார்த்திகை, சபரிமலை ஐயப்பன் சீசன்! பழனி முருகனை காண படையெடுக்கம் பக்தர்கள்..

கார்த்திகை மாதத்தையும் சபரிமலை ஐயப்பன் சீசனையும் முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் ஏராளமான பக்தர்கள்
பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் ஏராளமான பக்தர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

திண்டுக்கல்:கார்த்திகை மாதத்தையும் சபரிமலை ஐயப்பன் சீசனையும் முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் சீசன் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மண்டல பூஜையுடன் துவங்கிய நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும், சபரிமலைக்கு இருமுடி கட்டி பக்தர்கள் சென்று வருகின்றனர்.

பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் ஐய்யப்ப பக்தர்கள் தங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கும் செல்கின்றனர். இதனால் பழனியில் ஐயப்ப பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து பழனியில் படிப்பாதை, யானை பாதை, வழியாக ஆண்கள், பெண்கள் என இரண்டு வரிசையாக பிரிக்கப்பட்டு, செல்போன்கள் கொண்டு செல்லாதவாறு ஓலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து, சோதனை செய்யப்பட்டு, பக்தர்கள் மலைக்கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க:6 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்தல்... 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி?

மேலும் பக்தர்கள் சாமியை பார்க்க மின் இழுவை ரயிலில் ரூ.10, ரூ.50, ரூ.60 கட்டண செலுத்தி தனி தனி வரிசையில் நின்று சுமார் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோயிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தங்கும் இடம், கழிவறை வசதி, மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு தனி வழி உள்ளிட்ட அடிப்படை வசிதிகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் கோயில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details