சென்னை:அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் இரவில் கொள்ளையடிப்பதும், பகலில் பிரியாணி கடை உரிமையாளராகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சென்னையில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு ஞானசேகரன் கொள்ளையடித்து வந்தார். குறிப்பாக கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, அபிராமபுரம், ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களை குறி வைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் .
மேலும் முதியவர்கள் மட்டுமே உள்ள வீடுகளை குறிவைத்து பல கொள்ளை சம்பவங்களை அவர் அரங்கேற்றியதும் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக சம்பவத்தை மறைப்பதற்காகவும் கொள்ளையடித்த இடங்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு செல்வதை ஞானசேகரன் வழக்கமாகக் கொண்டிருந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தொழிலதிபரை பணம் கேட்டு மிரட்டி கடத்திய சம்பவத்தில் குடும்பத்துடன் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார் அதன் பிறகு தான் மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞானசேகரன் கொள்ளை அடிக்கும் சம்பவத்தை அரங்கேற்றினார்.
இதையும் படிங்க:'விஜய், அண்ணாமலை புகைப்படத்தை மார்ஃபிங் செய்த யூடியூப் சேனல்' - மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!
மேலும், கொள்ளையடித்த பணத்தில் தனது சொந்த ஊரான உத்திரமேரூர் அருகே 3 1/2 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் பண்ணை வீடு அமைத்து சொகுசாக வாழ்ந்து வந்திருக்கிறார். அடுத்து 2018 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் போலீசார் ஞானசேகரனுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை போலீசார் முடக்கி அதை மீட்டு உள்ளதும் தெரியவந்துள்ளது.
கொள்ளையடித்தபோது கைது செய்யப்பட்ட ஞானசேகரன் (Image credits-Etv Bharat Tamilnadu) மேலும் தொழிலதிபரை மிரட்டி காவல் துறை கைது செய்யப்பட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன் பிறகு அரசியல் கட்சியில் பதவி வாங்கி கோட்டூர்புரத்தில் வசித்துக் கொண்டு கொள்ளையடித்த பணத்தை வைத்து நண்பர்களுடன் சேர்ந்து சொகுசாக வாழ்ந்து வந்திருக்கிறார்.
இதுபோல சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் 40 சவரன் தங்க நகை கொள்ளை அடித்த சம்பவத்தில் அவர் தண்டனை பெற்றுள்ளார். மேலும் இரவில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி விட்டு பகலில் அண்ணா பல்கலைக்கழகம் அருகே பிரியாணி கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார். மேலும் மாலை நேரத்தில் கல்லூரியில் ஆண் நண்பருடன் தனியாக பேசிக் கொண்டிருக்கும் மாணவிகளை நபர்களை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது,"என்று தெரிவித்துள்ளனர்.