தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்..ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாதை அடுத்து அதிரடி முடிவு! - Ooty Race Course Sealed

NILGIRI HORSE RACING LAND RESCUE: உதகையில் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானம் ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாதை அடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி குதிரை பந்தய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 4:16 PM IST

NILGIRI HORSE RACING LAND
NILGIRI HORSE RACING LAND (Credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: உதகையில் வருவாய்த் துறையினருக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 120 ஆண்டு காலமாக மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. இந்த குதிரை பந்தயங்களானது உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

இந்நிலையில், மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகமானது அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கடந்த 1978 முதல் கட்டாமல் இருந்துள்ளது. இதுவரை 822 கோடி வரை குத்தகை தொகையானது நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கானது நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் 21ஆம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால், அந்த நோட்டீஸ்க்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகமானது பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 5) காலை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில், காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் நிலத்தினை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து, ரேஸ் கோர்சை சுற்றி உள்ள இந்நிலம் அரசுக்கு கையகப்படுத்தப்பட்டது என்ற பேனர்களை வைத்துள்ளனர். மேலும், குதிரை பந்தய மைதானத்திற்குள் உள்ள அலுவலக கட்டிடங்கள், நிர்வாக கட்டிடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. மேலும், எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "சமூக நீதியைப் பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை" - ஸ்டாலினை விளாசிய அன்புமணி ராமதாஸ்! - Anbumani Ramadoss

ABOUT THE AUTHOR

...view details