சென்னை:சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு, விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும், மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ, "எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத வாய்ப்பு பெற்ற தொகுதி சென்னை மேற்கு மாவட்டம் தான். ஏனென்றால் தலைமையிடம் நெருக்கமாக இருப்பது நாம் தான். பாமர மக்களுக்காக போராடியும் கார்ப்ரேட் நிறுவனங்களின் முகமுடியை நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் கிழித்து கொண்டுள்ளார்.
சென்னை மேற்கு மாவட்டம், பிற மாவட்டத்திற்கு வழிகாட்டியாகவும், முதன்மையாகவும் உள்ளது. அதன் எடுத்துக்காட்டாக தான் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று போடப்பட்டுள்ள தீர்மானம். உலக அளவில் கொண்டு செல்ல ஃபார்முலா கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி பயன்படுத்தி கொண்டார்'' என்றார்.
பின்னர் பேசிய எம்பி தயாநிதி மாறன், "தமிழ்நாடு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த முடியாது சொன்னவர்கள் மத்தியில் மூன்றே மாதத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி சாதனை படைத்தார். அதே போல் கேலோ இந்தியா போட்டியில் 36வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, நமது அரசு பொறுப்பேற்ற பின் 3வது இடத்திற்கு உயர்ந்தது.