கும்பகோணம்:மன்னார்குடியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்த 17 வயது மாணவி மற்றும் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் கல்லூரி 17 வயது மாணவர் இருவரும், கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (புதன்கிழமை) அறை எடுத்து தங்கி இருந்த நிலையில், மாணவி அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து, இச்சம்பவத்தை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, மாணவியுடன் தங்கியிருந்த கல்லூரி மாணவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உறவினர்களான இருவரும் கோயில் செல்ல கும்பகோணம் வந்தபோது, பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டதால் குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக் கொள்ள அறை எடுத்துத் தங்கியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாணவியின் மரணத்தில் மாணவர் மட்டுமில்லாமல், கூடுதல் நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்பதாகவும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், மேலும் இவர்களுக்கு அறை அளித்த விடுதி நிர்வாகத்தினர் மீதும் வழக்கு தொடர வேண்டும் என்றும் மாணவியின் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.