தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் அருகே நடந்த ரேக்ளா பந்தயம்:  சீறிப்பாய்ந்து சென்ற குதிரைகளை கண்டு ரசித்த பொதுமக்கள்! - REKLA RACE IN TIRUVALLUR

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூரில் ரேக்ளா குதிரை பந்தயம் மற்றும் மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது.

ரேக்ளா பந்தயம்
ரேக்ளா பந்தயம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 6:32 PM IST

திருவள்ளூர்:துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூரில் ரேக்ளா குதிரை பந்தயம் மற்றும் மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது.

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ரேக்ளா பந்தயம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் புல்லரம்பாக்கம் பகுதியில் இருந்து ஒதப்பை, பூண்டி, நெய்வேலி கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகள் வரை, சிறிய குதிரைகள், நடுத்தர குதிரைகள், பெரிய குதிரைகள் என 3 வகையான குதிரைகளுக்கு 3 பிரிவுகளின் கீழ் 16 கிலோ மீட்டர், 14 கிலோ மீட்டர், 12 கிலோ மீட்டர் என பந்தய தூரம் நிர்ணயித்து பந்தயம் நடைபெற்றது.

இதையும் படிங்க:தவெக மாநாடு பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் உயிரிழப்பு; குடும்பத்தாருக்கு நிவாரண தொகை வழங்கிய அமைச்சர்!

இதில், சென்னை, ஆவடி, திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 47 குதிரைகள் பந்தயத்தில் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து மகளிருக்கான கபடி போட்டியை அமைச்சர் சா.மு. நாசர் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். இந்த கபடி போட்டியில் சென்னை, பல்லாவரம், அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன. ரேக்ளா குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த குதிரைகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகையும், அதேபோல் மகளிருக்கான கபடி போட்டியில் வெற்றி பெற்று அணிக்கு கோப்பையும் வழங்கப்பட்டன.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details