தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நிகழ்ச்சிகளுக்காக பட்டாசு இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும்”.. ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவுரை! - Firecrackers stock - FIRECRACKERS STOCK

Ranipet Collector: சுபநிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் வெடிப்பதற்காக அதிகளவில் பட்டாசுகளை வாங்கி வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி புகைப்படம்
ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 3:20 PM IST

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டையில், சில நாட்களுக்கு முன்பாக சரஸ்வதி என்ற மூதாட்டி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவரது நிகழ்வில் பட்டாசு வெடித்த நிலையில், அதிலிருந்து சிதறிய தீப்பொறியானது ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பட்டாசு பையின் மீது பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், துக்க நிகழ்ச்சியில் இருந்த 12 நபர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்கை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் ஆங்காங்கே பட்டாசு மற்றும் வெடி விபத்துகளின் மூலம் பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனர். இதனைத் தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்சிகளில் வெடிப்பதற்கு அதிகளவில் பட்டாசுகளை வாங்கி தங்கள் வீடுகள் அல்லது பொது இடங்களில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் பட்டாசுகளை வெடிக்கும்போது கூடுதல் கவனத்துடன் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வெடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:காக்களூர் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து: 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! மற்றவர்களின் நிலை என்ன? - Kakkalur Sipcot Fire Accident

ABOUT THE AUTHOR

...view details