தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரத்தை புரட்டிப் போட்ட கனமழை - மீனவ கிராமங்கள் கடும் பாதிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிமுதல், மாலை 4 மணிவரை ராமேஸ்வரத்தில் மட்டும் 411 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஊருக்குள் தேங்கிய மழைநீர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஊருக்குள் தேங்கிய மழைநீர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 10 hours ago

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மீனவர் கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழைநீருடன் கடல் நீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 19) இரவு தொடங்கி தற்போது வரை தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம், வேதாளை, மரைக்காயர் பட்டணம் உள்ளிட்ட கடலோர கிராமங்கள் மழை நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் -கனமழை பாதிப்பு காட்சிகள் (Credits - ETV Bharat Tamilnadu)

மண்டபம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் மழைநீர் முழங்கால் அளவு தேங்கியுள்ளது. இதனால், நோயாளிகள் மருத்துவமனைக்குள் வர முடியாமலும், அவசர ஊர்தி உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வர முடியாமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றன.

பாம்பன், சின்னப்பாலம், முந்தன்முனை உள்ளிட்ட கடற்கரை ஓரமுள்ள மீனவர்கள் குடிசைகளுக்குள், மழை நீருடன் கடல் நீரும் புகுந்து வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருப்பதால், வீட்டில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் மீனவ மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் (கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்)
இதையும் படிங்க
  1. தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம்; நெல்லை மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
  2. "தென்தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  3. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.. 178 வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை பங்கிட்டது அம்பலம்..!

மேலும், அரியமான் கடற்கரை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மழைநீர் கடல் நீருடன் கலந்து கடற்கரை மணல் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து நிலப்பரப்பும் கடலும் தெரியாத அளவு காணப்படுகிறது.

இதனால் அப்பகுதிக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலோர பகுதிகளுக்கோ, கடலுக்குள்ளோ செல்ல வேண்டாம் என கடலோர காவல்துறை எச்சரித்துள்ளது.

பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவல்

ராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மழைப் பொழிவின் அளவை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணிமுதல், மாலை 4 மணிவரை ராமேஸ்வரத்தில் 411 மில்லிமீட்டர் அதிகபட்ச மழைப் பதிவாகியுள்ளது. இதனையடுத்து தங்கச்சிமடம் பகுதியில் 322 மிமீ மழையும், மண்டபம் பகுதியில் 261 மிமீ, பாம்பன் பகுதியில் 237 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

முறையே, ராமநாதபுரத்தில் 75 மிமீ, கடலாடி 71.2 மிமீ, வலிநோகம் 65.6 மிமீ, முதுகுளத்தூர் 48.2 மிமீ, கமுதி 45.8 மிமீ, பள்ளமூர்குளம் 45.2 மிமீ, பரமகுடி 25.6 மிமீ, திருவாடனை 11.8 மிமீ, ஆர்.எஸ்.மங்கலம் 10.4 மிமீ, தீர்தண்டதனம் 7.2 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details