தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுக்கடலில் கவிழ்ந்த படகு.. இலங்கை கடற்படையினாரால் மீட்டு தமிழகம் திரும்பிய மீனவர்கள்! - Rameswaram fishermen Rescued - RAMESWARAM FISHERMEN RESCUED

Rameswaram fishermen Rescued: கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்த விவகாரத்தில் இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படை மீட்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைத்த நிலையில், இன்று அவர்கள் பத்திரமாக விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் சுரேஷ் மற்றும் டால்வின் ராஜ்
மீட்கப்பட்ட மீனவர்கள் சுரேஷ் மற்றும் டால்வின் ராஜ் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 9:50 PM IST

சென்னை:ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி டல்வின்ராஜ் (45) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுரேஷ்(49), வெள்ளைச்சாமி என்ற முனியாண்டி (55) மற்றும் எமரிட் (49) ஆகிய நான்கு பேரும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர்.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென படகின் பக்கவாட்டில் பலகை உடைந்து கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது. இதையடுத்து, படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து கச்சத்தீவை நோக்கி நீந்திச் சென்று உள்ளனர்.

இதில் டால்வின் ராஜ், சுரேஷ் ஆகிய இருவரையும் கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இருவரையும் ஒப்படைத்தனர். மேலும், கடலில் மூழ்கி மாயமான சுரேஷ், வெள்ளைச்சாமி என்ற முனியாண்டி ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலை இலங்கை கடற்படை உதவி உடன் தேடி மீட்டு, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், உயிர் பிழைத்து வந்த டால்வின் ராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோர் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் உதவியுடன் எமர்ஜென்சி சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். பின், சென்னை விமான நிலையத்தில் தமிழக மின்வளத்துறை அதிகாரிகள் இரண்டு மீனவர்களையும் வரவேற்று, உணவுப் பொட்டலங்கள் கொடுத்து அவர்களின் சொந்த ஊருக்கு கார் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:விரைவில் இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்.. மத்திய அரசு ஐகோர்ட்டில் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details