தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி முதல்வர் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாதது ஏன்? - தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி - RAMADOSS ON GOVT COLLEGE PRINCIPALS - RAMADOSS ON GOVT COLLEGE PRINCIPALS

PMK ON COLLEGE PRINCIPALS: மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகள் முதல்வர் இல்லாமல் தவிப்பதை தமிழக அரசு கவனிக்க வேண்டும். விரைவில் கல்லூரி முதல்வர்களை நியமிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

ராமதாஸ் கோப்புப்படம்
ராமதாஸ் கோப்புப்படம் (Credits - Dr.Ramadoss Facebook Official Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 5:55 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. இவற்றை தமிழக அரசு தாமதிக்காமல் உடனடியாக கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமிக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் இல்லாமல் செயலிழக்கும் கல்லூரிகள்:இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல்வர் இல்லாமல் இருக்கும் கல்லூரிகளில்அன்றாட நிர்வாகம் பாதிக்கப்படுவதுடன், கல்வித்தரமும் குறைகிறது. இவ்வாறு நிலையான முதல்வர்களுக்கு மாற்றாக பொறுப்பு முதல்வர்களைக் கொண்டு கல்லூரியை நடத்துவதால், கல்லூரியின் கல்வி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படுவதுடன் அரசுக்கும் கூடுதல் செலவாக இருந்து வருகிறது.

முதல்வர் பணி நியமனம் எப்படி?:தமிழக அரசு 2022ஆம் ஆண்டில் பிறப்பித்த ஆணைப்படி, முதல்வர் பணியிடம் காலியாக இருந்தால் அந்த இடத்தில் மூத்த இணைப் பேராசிரியர் ஒருவரை பொறுப்பு முதல்வராக நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவருக்கு அவரது மொத்த ஊதியத்தில் 20% அல்லது முதல்வர் பணிக்கான ஊதியத்தில் 50%, இவற்றில் எது குறைவோ அதை கூடுதல் ஊதியமாக வழங்க வேண்டும். அதன் மூலம் பொறுப்பு முதல்வருக்கு மாதம் ரூ.40,000 வரை கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். இது நிலையான முதல்வருக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட அதிகமாகும்.

இருப்பினும் அரசு கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்புவது என்பது கடினமான பணி அல்ல. கல்லூரி முதல்வர்கள் பணி மூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் முதல்வர்கள் பட்டியல்கள் அரசுக்கு முன்கூட்டியே தெரியும். இருந்தும் முதல்வர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய முதல்வர்களை தமிழக அரசு தேர்வு செய்து நியமிக்க தயங்குவது ஏன்? என்பது தான் தெரியவில்லை என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசு கல்லூரிகளும் காலியாக இருக்கும் முதல்வர் பதவியும்:தமிழ்நாட்டில் பல அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் 8 மாதங்களுக்கும் மேலாக காலியாகக் கிடக்கின்றன. 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இப்போது காலியிடங்களின் எண்ணிக்கை 60-க்கும் அதிகமாகிவிட்டது. மே மாதத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கும்; ஜூன் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும். இத்தனை பொறுப்புகளd இருக்கும்போது அரசு கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாமல் பொறுப்பு முதல்வர்களை வைத்து கல்லூரி நிர்வாகத்தை நடத்துவது தவறான அணுகுமுறையாகும். எனவே அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்' என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தனியார் வசம் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.. சமூக நீதியை சீர்குலைக்க வேண்டாம் என சிஐடியு ஜோதி எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details