சென்னை:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான ராபர்ட் பயாஸ், முருகன், ஜெயக்குமார் ஆகிய மூவரும் திருச்சி சிறப்பு முகாமில் தங்கி இருக்கின்றனர்.
இதையடுத்து, மூவரும் தங்கள் சொந்த நாடான இலங்கைக்குச் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலுக்கு, மூவரையும் போலீசார் இன்று அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இலங்கை துணை தூதராக அதிகாரி வெங்கடேசன் தலைமையில், மூவருக்கும் நேர்காணல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உதவி ஆணையர் சரவணன் தலைமையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் காவல்துறை வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு, இந்த நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.