விழுப்புரம்:2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் புரட்சி பாரதம் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என பேசப்பட்டது.
இந்த நிலையில் புரட்சி பாரதம் கட்சிக்கு தற்போது வரை அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படாததைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள பெரிய சவலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட புரட்சி பாரதம் கட்சியினர் ஒன்று கூடி அதிமுகவுக்கு எதிராகவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில் அதிமுகவுக்கு எதிராகப் புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம் ஏன்?:2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (புதன்கிழமை) முதல் தொடங்கியது.