தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்களை மிரட்டி ஜிபே மூலம் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை! - Puducherry Minister Namassivayam - PUDUCHERRY MINISTER NAMASSIVAYAM

Puducherry Minister Namassivayam: புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கூறி காவலர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி நூதன முறையில் ஜிபேவில் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் நமச்சிவாயம்
அமைச்சர் நமச்சிவாயம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 11:35 AM IST

புதுச்சேரி:புதுச்சேரி காவல்துறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்களை தடுத்தல், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் டி.ஜி.பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டி.ஜி.பி ஷாலினி சிங் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பெருகி வரும் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறையினரால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பொதுப்பணித் துறையும் போக்குவரத்து காவல்துறையும் சேர்ந்து போக்குவரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரி மாநில மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற ஒரு நிலைமையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சட்ட ஒழுங்கு போலீசார் மட்டுமின்றி, போக்குவரத்து போலீசாரும் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 34 இடங்களில் சோலாரில் இயங்கும் டிஜிட்டல் சிக்னல் அமைக்கப்படுகிறது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி குற்றவாளிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மேம்பாலங்கள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோப்புகளை அனுப்பி இருக்கிறோம்.

டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்தி மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதி விரைவில் பெறப்படும். மேலும், ஹெல்மெட் அணியாதவரிடம் விதிமுறைகளை மீறி அபராதம் விதித்து காவலர்கள் ஜிபே மூலமாக பணம் வாங்குவது, பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதுச்சேரியில் கருத்துரிமை சுதந்திரம் என்ற பெயரில் முதலமைச்சர், அமைச்சர், கவர்னரை கண்டித்து போஸ்டர் ஓட்டுகிறார்கள். இது தவறு, ஜனநாயக வரைமுறையோடு அவர்கள் இருக்க வேண்டும். வரைமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை காவல்துறை எடுக்கும்” என்றார்.

இதையும் படிங்க:"அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் எய்ம் எய்ம்ஸ் தான்" - அமைச்சர் அன்பில் மகேஷ்! - Minister Anbil Mahesh Poyyamozhi

ABOUT THE AUTHOR

...view details