புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு D-60 என்ற நகர பேருந்து சென்று வருகிறது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி செல்போன் பேசியபடி ஓட்டுநர் ஒருவர் இந்த பேருந்தை ஓட்டிக்கொண்டு பயணம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோ த்ற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரசு தரப்பு ஓட்டுநரை நான்கு நாள் பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில் அந்த ஓட்டுநர் இன்று மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், மீண்டும் ஓட்டுநர் திமுக துண்டை அணிந்தபடி அதே வாகனத்தை செல்போன் பேசியபடி ஓட்டிச் சென்ற வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.