தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த 2 ஆம் வகுப்பு சிறுவன்! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி - Trichy school boy fainted and died - TRICHY SCHOOL BOY FAINTED AND DIED

Trichy school boy fainted and died: திருச்சி தனியார் பள்ளியில் உடற்கல்வி வகுப்பின்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த இரண்டாம் வகுப்பு மாணவனின் கடைசி நிமிடசிசிடிவி காட்சி வெளியாக பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுவன்
மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுவன் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 10:54 PM IST

திருச்சி:திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் திருச்சி மாநகர் பகுதியில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி வகுப்பு நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது மாணவர்கள் வகுப்பறையில் தங்களுக்குள் விளையாடி கொண்டிருந்த போது, 2-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரின்ஸ் திடீரென பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார்.

வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுவன் (Credits- ETV Bharat Tamil Nadu)

இதை பார்த்து அதிர்ச்சியான சக மாணவர்கள் ஆசிரியரிடம் இதை தெரிவித்த நிலையில், ஆசிரியர்கள் உடனடியாக மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பின், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.‌ இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மாணவன் முன்பே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின் மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள குழந்தை‌ இயேசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருப்பது தெரியவந்தது. அதன் காரணமாக மாணவன் உயிரிழந்தாகவும், மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இதனை அடுத்து பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவன் இறப்பின் காரணமாக அந்த தனியார் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பள்ளி தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட மாணவனை தாக்கிய சக மாணவர்கள்; நெல்லையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details