தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 3:09 PM IST

ETV Bharat / state

கைவிலங்குடன் தப்பிச் சென்ற காட்பாடி விசாரணைக் கைதி கைது! - Prisoner arrested

Katpadi Prisoner Escaped: காட்பாடி காவல்நிலையத்திலிருந்து கைவிலங்குடன் தப்பியோடிய விசாரணைக் கைதியைத தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்
கைது செய்யப்பட்டுள்ள நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்:காட்பாடி அடுத்த தாராபடவேடு குளக்கரையைச் சேர்ந்தவர் 22 வயதான காமேஷ். இவர் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி காட்பாடி போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, காமேஷ் கைவிலங்குடன் காவல் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது. குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டதில் காட்பாடி காவல் நிலையமும் ஒன்று. அந்த காவல் நிலையத்தில் இருந்து கைதி விலங்குடன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தப்பிச் சென்ற காமேஷ், காட்பாடி அடுத்த கசம் பகுதியில் உள்ள மலை அடிவாரப் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், காட்பாடி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் போலீசார் காமேஷ் இருக்கும் இடத்தை சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:காதலியின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details