தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சாதி என்பது கெட்ட வார்த்தை..” - பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுவது என்ன? - PRINCE GAJENDRABABU about caste

Gajendra Babu: அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய விழுமியங்களுக்கும், சமூகத்தின் விழுமியங்களுக்கும் உள்ள வேறுபாடு மாணவர்களுக்கு தெரிந்தால் தான் சாதி என்ற தீமைகளை விட்டுவிட்டு அரசியலமைப்பு சொல்லக்கூடிய சகோதரத்துவத்தை மாணவர்கள் உயர்த்தி பிடிக்க முடியும் என பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 4:55 PM IST

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில், பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தில் ’சாதி ஒழிப்பிற்கான பாடம்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பணிமனை நடைபெற்றது. இதில் பொதுப் பள்ளிகாண மாநில மேடை தலைவர் ரத்தினசபாபதி, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரின்ஸ் கஜேந்திரபாபு, "இந்திய அரசியலமைப்புச் சட்டம் முன் வைக்கக்கூடிய சகோதரத்துவத்தை ஒவ்வொரு மாணவரும் உணரக்கூடிய வகையில், பாடத்திட்டம் மூலமாக பல செயல்பாடுகளை நடத்துங்கள் என்று சொல்வது தான் கல்வி ஏற்பாடு. இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் முடிந்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் முன் வைக்கக்கூடிய விழுமியங்களை மாணவர்கள் தங்களுடைய வாழ்வியல் விழுமியங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கக்கூடிய விழுமியங்களுக்கும், சமூகத்தின் விழுமியங்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று மாணவர்களுக்கு தெரிய வேண்டும்.

அந்த வேறுபாடு தெரியும் பொழுது தான் எது நல்லது, எது கெட்டது என்று மாணவர்களால் பகுத்து பார்க்க முடியும். தீமைகளை விட்டுவிட்டு, இந்திய அரசியலமைப்பு சொல்லக்கூடிய சகோதரத்துவத்தை, சுதந்திரத்தை, சமத்துவத்தை மாணவர்கள் உயர்த்தி பிடிக்க முடியும். அதற்கு தடையாக சாதி என்ற கருத்தியல் இருக்கிறது. சாதி என்பது ஒரு பாகுபாடு கொண்ட நடவடிக்கை, அது ஒரு கெட்ட வார்த்தை, அது மக்களைப் பிரிக்கிறது.

மக்களைப் பிரித்து சமூகத்தை தனித்தனியாக வைக்கிறது என்றால், அதை நல்ல வார்த்தை என்று சொல்ல முடியாது. அதனால் சாதி என்ற கெட்ட வார்த்தையை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது. பள்ளிக்கூடத்தில் மட்டுமல்லாமல், தங்களுடைய வாழ்க்கையின் விழுமியங்களாக மாணவர்கள் சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கான ஒரு பாடத்திட்டத்தை வடிவமைப்பது, அதாவது அறிவியல், சமூக அறிவியல் பாடத்திட்டத்திற்குள் எந்த அளவு இந்த சாதி ஒழிப்பிற்கான பாடத்தைக் கொண்டு வர முடியும் என்று பார்க்க வேண்டும். குறிப்பாக, பள்ளிபாடத் திட்டம், ஆசிரியர் கல்வி பாடத்திட்டம் என இந்த இரண்டு பாடத்திட்டத்திலும், சாதி ஒழிப்பை எவ்வாறு உள்ளே கொண்டு வர முடியும் என்பதை விவாதிக்கும் பணிமனை நடைபெற்றது.

மாணவர்கள் காலையில் தேசிய கீதம் பாடும் போது அனைவரும் சமம் என உறுதிமொழி எடுக்கின்றனர். ஆனால், அதனை மீறும் வகையில் செயல்பாடுகள் இருக்கிறது. எனவே, பள்ளியில் சாதியை ஒழிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அதனை அறிவியல் ரீதியில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இந்த பணிமனை ஆலோசனைகளை தொகுத்து தமிழ்நாடு அரசிற்கு அளிப்போம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம்; அதிகாரிகளுடன் முதலைச்சர் ஸ்டாலின் ஆலோசனை! - CM MK Stalin

ABOUT THE AUTHOR

...view details