தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் டிஎஸ்பி-யிடம் சீரிய இளைஞருக்கு மாவு கட்டு... காட்டுக்குள் பதுங்கியவரை தூக்கிய தனிப்படை..! - DSP Gayathri Assault Case - DSP GAYATHRI ASSAULT CASE

aruppukottai DSP Gayathri Assault Case: அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய நபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முருகேசன்
கைது செய்யப்பட்ட முருகேசன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 5:01 PM IST

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மினி வேன் டிரைவர் காளிக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது, போராட்டக்காரர்களை அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி காயத்ரி தடுக்க முயன்றார். அப்போது போராட்டக்காரர்கள் சிலர் டிஎஸ்பிஐ தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். இந்த வழக்கில் அன்றைய தினமே ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த இருளாண்டி என்பவர் மகன் முருகேசன் (28) தலைமறைவானார்.

இதனையடுத்து மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். '

இந்த நிலையில், இன்று அதிகாலை அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை பகுதியில் காட்டுக்குள் முருகேசன் மறைந்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் முருகேசன் தப்ப முயற்சித்தார்.‌ அப்போது தடுமாறி கீழே விழுந்ததில், முருகேசனுக்கு வலது கை முறிவு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து போலீசார் அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:இரவில் லிப்ட் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிக்கிய வாலிபர்கள்.. தஞ்சையில் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details